Thursday, September 22, 2022

தோழனின் கதை"

 



பேசிக் கொண்டிருக்கும் போது 


கட்டித் தழுவும் போது


முத்தத்தை எதிர்பார்த்து காத்திருக்கையில்

என


ஒரு புள்ளியில் காதல் நிராகரிக்கப்படுகிறது 


நேசம் எவ்வளவு சவாலானது


அவளின் ஆழமான காதல் 


எனக்கு ஞாபகங்கள் இல்லாது போன பக்கங்களை குற்ற உணர்வோடு அவசர அவசரமாய் புரட்டுகிறது 


இச்சைகள் இல்லாத பக்கங்களை பைத்திய சிந்திப்பு காமம் பூசிப்பார்க்கிறது


ஒரு முத்தத்தால்...


ஒரு சினுங்களில்...


அல்லது ஒரு புன்னகையால்...


ஒரு சொல்லால்...


உடைக்கப்பட வேண்டிய மௌனம் 

மனம் உடையும் வரை நீடிக்கிறது 


போர்களத்து ரோஜா போல 

காதல் எப்போதும் யாராலும் விரும்ப இயலாது போகிறது .


அழகான அவள்களுக்கும்

அவன்களுக்கும்

***

றியாஸ் காதர்

No comments:

Post a Comment

பார்வை குறைபாடு உள்ளவர்கள்

  கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் இந்த கண்பார்வை. இந்த க...