Thursday, September 22, 2022

வாழ்க்கை

 



விரக்தியுடன் வாழ்க்கை இல்லை,
வாழ்க்கையுடன் விரக்தி இல்லை.

வாழ்பவனே தூரிகை பிடிக்கிறான்
வாழ்வை வரைந்து கொள்ள…

எப்போதும் வாழ்க்கை எம்மை
ஆசுவாசப் படுத்துவதில்லை
சில நிமிடங்களை ஈரம் செய்து விடுகிறது…

இருப்பதைத் தொலைத்து விடுகிறோம்
இன்னும் ஒன்றை தேடும் பரபரப்பில்…

வாழ்க்கை ஒரு பெண்ணைப் போல
அவளை நீ புன்னகைக்கச் செய்கின்ற போதே
அவளும் உன்னை புன்னகைக்கச் செய்கிறாள்
வாழ்தலின் கலையும் அப்படியே…

வாழ்க்கை குழந்தையின் நோக்கில் அழுகை…
இளைஞனின் நோக்கில் அழகான பெண்…
கன்னியின் நோக்கில் ஒரு திருமணம்…
வாழ்ந்த தம்பதியினரின் நோக்கில் கசப்பான அனுபவம்…

வாழ்வு இனிமையான நாவல்
கண்ணீர் சிந்தும் வரிகளில் இடை நிறுத்தி விடக்கூடாது
இறுதி புள்ளி வரை பயணி
முடிவு மிக மிக அழகானதாக இருக்கும்…

வாழ்க்கை குறுகியதுதான்
அதிர்ஷ்டங்களும் துரதிர்ஷ்டங்களும்
அதனை நீளமாக்குகின்றன…

***

கவிஞன். றியாஸ்

பொலனறுவை






No comments:

Post a Comment

பார்வை குறைபாடு உள்ளவர்கள்

  கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் இந்த கண்பார்வை. இந்த க...