Wednesday, April 3, 2024

உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்



 ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பற்றி இன்று வரைக்கும் எம்மில் அதிகமானவர்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது. 

ஆகவே தான், இதன்மூலம் EPF பற்றிய அடிப்படை தெளிவொன்றினை வழங்க முடியும் என எதிர்பார்க்கின்றேன். ஏனெனில், தனியார் துறையில் வேலை செய்யும் பலரும் அவர்களின் தற்போதைய நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், மற்றும் வயது முதிர்ந்த காலத்தை எண்ணி வருந்துவதிலிருந்து மீண்டு நம்பிக்கை ஊட்டும் எதிர்காலம் இந்த EPF மூலம் கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டிற்கு வர முடியும்.

தனியார் துறையில் பணிபுரிபவர்களின் வாழ்வில் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசினால் 1958 ஆம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தினால் அங்கிகாரம் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகிறது.

ஒரு ஊழியரின் மாதாந்த சம்பளத்தில் ஆகக் குறைந்தது 8% வீதமான தொகையினை ஊழியரிடமிருந்தும் அச்சம்பளத்தின் 12% வீதமான தொகையினை ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படாமல் தொழில் தருணரிடமிருந்து பெறப்பட்டு மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிடப்படுவது இந்த EPF பணமாகும்.

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது EPF பணத்தின் மூலம் நிகழ்காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள்

 1. வீட்டு நோக்கங்களுக்காக அல்லது மருத்துவ சிகிச்சைக்காக EPF வைப்பிலிருந்து 30% முன் பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது உங்கள் EPF பணத்தில் முழுத் தொகையின் 30% வீதமான பணத்தினை நீங்கள் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள முடியும்.

2. ஊழியர் சேவமலாக நிதியிலிருந்து வீடமைப்புக்காக கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தல். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உங்கள் EPF பணத்தை கொண்டு வீடு அமைப்புக்காக கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.


EPF நிதியிலிருந்து நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள் அதாவது உங்கள் EPF நிதிகனை நீங்கள் முழுமையாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்

1. வயது பூரணமடைவதால் வேலை விட்டு விலகுதல். அதாவது ஆண் ஒருவராயின் 55 வயதும், பெண் ஒருவராயின் 50 வயதும் பூரணமாக இருந்தால், அவர் வேலையை விட்டு விலகி அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். 

2. திருமண நோக்கத்திற்காக வேலையை விட்டு விலகுதல். இது பெண்களுக்கு பாத்திரமான தாகும். அதாவது, வேலையில் இருந்து விலகி மூன்று மாதங்களுக்குள் திருமண செய்தல். அல்லது திருமணம் செய்து 5 வருடங்களுக்குள் வேலையில் இருந்து நீங்கிச் சென்றுள்ளவிடத்து அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

3. மருத்துவ காரணத்தால் உடல் கோளாறு காரணமாக நிரந்தரமாக வேலையை விட்டு விலகுமிடத்து, அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு அரசாங்க வைத்திய உத்தியோகத்தரொருவரால் உடலியலாமை நிலைபற்றி சுகாதாரம் 307 ஆம் இலக்க பத்திரம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

4. நிரந்தர குடியுரிமை பெற்று இலங்கையை விட்டு வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக வேவலயினை விட்டு விலகுதல். அதாவது இலங்கை பிரஜா உரிமையினை ரத்து செய்து வெளிநாடு ஒன்றில் பிரஜா உரிமை பெற்று செல்லும்போது உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

5. அரசாங்க சேவையில் நிரந்தர மற்றும் ஓய்வூதியத்துடன் கூடிய தொழில் ஒன்றிற்காக செல்லும்போது வேலையில் இருந்து விட்டு விலகுதல்.

6. கூட்டுத்தாபனம் ஒன்றும் மூடப்படும் போது அல்லது மேலதிக தொழிலாளர்களை நீக்கும் போது வேலையில் இருந்து விலகுதல்

இவ்வாறான 06 சந்தர்ப்பங்களிலும் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

இது தவிர ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர் இறந்த பின்னர் அவர் சார்ந்த பின்னுரித்தாளிகள் அவரின் EPF பணத்தினை பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக்கொள்ள உங்கள் நிரந்தர வதிவிடத்திற்கு அண்மையில் உள்ள தொழில் திணைக்களத்தில் விண்ணப்பங்களை கையளிப்பதன் மூலம் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், உங்கள் EPF பணத்தினை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவம் மற்றும் ஏனைய விண்ணப்பப் படிவங்களை தொழில் திணைக்களத்தின் இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

தொழில் திணைக்கள விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள click பண்ணவும்

இது தவிர மேலதிக தகவல்களை உங்கள் வதிவிடத்திற்கு அண்மையில் உள்ள தொழில் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.


YouTube video

https://youtu.be/v3E0JK7vL1g?si=rxKwsFHVkECFkTbl








No comments:

Post a Comment

பார்வை குறைபாடு உள்ளவர்கள்

  கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் இந்த கண்பார்வை. இந்த க...