Sunday, January 5, 2025

பார்வை குறைபாடு உள்ளவர்கள்

 



கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் இந்த கண்பார்வை. இந்த கண்பார்வை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்து நோக்கிலேயே தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சுகாதார அமைப்பு உலக கண்பார்வை தினத்தை அனுஷ்டிக்கின்றது.


உலக அளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வை குறைபாடு உள்ளதாகவும், 246 மில்லியன் பேர் குறைவான பார்வை திறனோடும், 39 மில்லியன் பேர் பார்வை இல்லாமலும் உள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதில் பார்வை குறைபாடு உள்ளவர்களில் சுமார் 90% பேர் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தில் இருக்கின்றார்கள் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

 இந்த பார்வை குறைபாடு அல்லது பார்வையற்றவர்கள் பற்றி சில குறிப்புகளை தான் இதில் நாம் பார்க்கப் போகின்றோம்.






 கண்பார்வையற்றவர்கள் தொடுகைகள் மூலமாகவே தமக்கு முன்னால் உள்ளவற்றினை அதிகம் உணர்ந்து கொள்கிறார்கள். அத்தோடு அவர்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடம்பெயர பெரிதும் உதவுவது அவர்கள் கையில் இருக்கும் கோல் அதாவது வெள்ளைப்பிரப்பு என்று நாம் சொல்வோம், இதன் உதவியினாலே அவர்கள் பயணங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. 

 சாதாரண மனிதர்களைப் போன்று இவ்வுலகில் அவர்கள் வாழ முடியாவிட்டாலும் அவர்கள் வாழ்வதற்காகவும் பல துறைகளில் அவர்கள் கால் பதிக்கவும் பல வழிமுறைகள் சமைக்கப்பட்டுதான் இருக்கின்றது.

 ஒரு மனிதனை முழு மனிதனாக்குவது கல்விதான். அந்த கல்விக்கு அச்சாணியாக இருப்பது தான் எழுத்து. அத்தோடு ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு வாசிப்பதும், எழுதுவது முக்கியமானது அடித்தளமாகும்.





 அந்த வகையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு எழுதுவதும், வாசிப்பதும் குறைபாடாக காணப்படக்கூடாது என்பதற்காக France கல்வியலாளர் Lousie  Braille என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே Braille எழுத்து முறையாகும். இந்த Braille எழுத்து முறையானது பார்வையற்றவர்களுக்கான குத்தெழுத்து முறையாகும். இதனைக் கொண்டு அவர்கள் எழுத வாசிக்க முடியும். Braille பயன்பாட்டில் 133 மொழிகளில் Braille குறியீடுகள் காணப்படுகின்றன இதுவே இவர்களுக்கு பெரும் சாதமாக சாதகமாக அமைகின்றது. அது மாத்திரமன்றி இந்த குத்தெழுத்தின் நவீன வடிவங்களாக typewriter , printer எனவும் இருக்கின்றது. 

அதுமாத்திரமன்றி இந்த நவீன உலகோடு அவர்களும் கைகோர்த்து செல்ல கணினி, கையடக்க தொலைபேசி என்பனவற்றை அவர்களும் உபயோகிக்க வேண்டும் என்பதற்காக taking software உருவாக்கப்பட்டது. இதனை கொண்டு அவர்கள் நவீன உபகரணங்களையும் கையாளக் கூடியதாக உள்ளது

 இவ்வாறான சாதனங்கள் இருக்கின்ற போது கல்விக்கு ஏது தடங்கல் என அவர்களுக்கு கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் திஹாரி, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இவ்வாறான கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.

 பல்கலைக்கழக மாணவர்களாக, விரிவுரையாளர்களாக, வளவாளர்களாக பல பரிமாணங்களில் அவர்கள் கல்வித் துறையில் கால் பதிக்கின்ற போது கல்விக்கு குறை என்றும் தடையல்ல என உரக்கச் சொல்கிறது. 

கல்வித் துறையில் மாத்திரமன்றி இவர்களின் திறமைகளை நாங்கள் பார்க்கும்போது எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றனர். பாடல், நடனம், திறமையான பேச்சு, கணினி, கையடக்க தொலைபேசி போன்ற நவீன உபகரணங்களை கையாளும் திறன், விளையாட்டு இவ்வாறான திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தும்போது உண்மையில் நாம் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். 

பார்வையற்றோர் என்றால் யாசகம் கேட்பார்கள், மற்றோரை வேண்டி இருப்பவர்கள், சுய செயல்பாடுகளை இழந்தவர்கள் என எண்ணி அவர்கள் எப்போதும் ஒரு மூலையில் உட்கார வேண்டியவர்கள் என்ற எம் மாயை தகர்த்தெறிய வேண்டும்.

நாம் விலகி அவர்களுக்கு இடம் கொடுத்தால் போதும் அவர்கள் அவர்களாகவே முன்னேறிக் கொண்டு செல்வார்கள். சில இடங்களில் நாம் கை கொடுத்து எழுப்ப வேண்டியிருக்கும் அதை நாம் செய்துவிட்டால் எமக்கு அல்லது எம் சந்ததிகளுக்கு அவர்கள் முன்னுதாரணமாக இருப்பார்கள்.

ஏனெனில் சிறந்த நிதி வசதிகள் மூலம் சிகிச்சைகள் மேம்படுத்தப்படாவிட்டால் 2050 ஆம் ஆண்டுக்குள் கண் பார்வை இழந்தவர்களின் தொகை 36 மில்லியனிலிருந்து 115 மில்லியன் ஆகும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அபாய நிலையில் நாம் சந்ததியினர் எதிர்கொள்ளாமல் இருக்க இன்றிலிருந்து நாம் தயாராக வேண்டும். ஏனெனில் பார்வை குறைபாட்டால் தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 ஆகவே தான் பொருளாதார ரீதியாக அல்லது ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு நாம் முன்னேற வாய்ப்பளிப்பதன் மூலமாக அவர்களின் எதிர்காலமும் எதிர்கால சந்ததியும் சிரமமற்ற இவ்வுலகில் வாழ முடியும்.




https://youtu.be/HiJPRmlhZzQ?si=GIyDzvF1CdKda1qi


தேடல் :- A.K. Arham ( B.A)


Wednesday, April 3, 2024

உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்



 ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பற்றி இன்று வரைக்கும் எம்மில் அதிகமானவர்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது. 

ஆகவே தான், இதன்மூலம் EPF பற்றிய அடிப்படை தெளிவொன்றினை வழங்க முடியும் என எதிர்பார்க்கின்றேன். ஏனெனில், தனியார் துறையில் வேலை செய்யும் பலரும் அவர்களின் தற்போதைய நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், மற்றும் வயது முதிர்ந்த காலத்தை எண்ணி வருந்துவதிலிருந்து மீண்டு நம்பிக்கை ஊட்டும் எதிர்காலம் இந்த EPF மூலம் கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டிற்கு வர முடியும்.

தனியார் துறையில் பணிபுரிபவர்களின் வாழ்வில் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசினால் 1958 ஆம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தினால் அங்கிகாரம் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகிறது.

ஒரு ஊழியரின் மாதாந்த சம்பளத்தில் ஆகக் குறைந்தது 8% வீதமான தொகையினை ஊழியரிடமிருந்தும் அச்சம்பளத்தின் 12% வீதமான தொகையினை ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படாமல் தொழில் தருணரிடமிருந்து பெறப்பட்டு மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிடப்படுவது இந்த EPF பணமாகும்.

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது EPF பணத்தின் மூலம் நிகழ்காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள்

 1. வீட்டு நோக்கங்களுக்காக அல்லது மருத்துவ சிகிச்சைக்காக EPF வைப்பிலிருந்து 30% முன் பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது உங்கள் EPF பணத்தில் முழுத் தொகையின் 30% வீதமான பணத்தினை நீங்கள் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள முடியும்.

2. ஊழியர் சேவமலாக நிதியிலிருந்து வீடமைப்புக்காக கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தல். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உங்கள் EPF பணத்தை கொண்டு வீடு அமைப்புக்காக கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.


EPF நிதியிலிருந்து நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள் அதாவது உங்கள் EPF நிதிகனை நீங்கள் முழுமையாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்

1. வயது பூரணமடைவதால் வேலை விட்டு விலகுதல். அதாவது ஆண் ஒருவராயின் 55 வயதும், பெண் ஒருவராயின் 50 வயதும் பூரணமாக இருந்தால், அவர் வேலையை விட்டு விலகி அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். 

2. திருமண நோக்கத்திற்காக வேலையை விட்டு விலகுதல். இது பெண்களுக்கு பாத்திரமான தாகும். அதாவது, வேலையில் இருந்து விலகி மூன்று மாதங்களுக்குள் திருமண செய்தல். அல்லது திருமணம் செய்து 5 வருடங்களுக்குள் வேலையில் இருந்து நீங்கிச் சென்றுள்ளவிடத்து அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

3. மருத்துவ காரணத்தால் உடல் கோளாறு காரணமாக நிரந்தரமாக வேலையை விட்டு விலகுமிடத்து, அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு அரசாங்க வைத்திய உத்தியோகத்தரொருவரால் உடலியலாமை நிலைபற்றி சுகாதாரம் 307 ஆம் இலக்க பத்திரம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

4. நிரந்தர குடியுரிமை பெற்று இலங்கையை விட்டு வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக வேவலயினை விட்டு விலகுதல். அதாவது இலங்கை பிரஜா உரிமையினை ரத்து செய்து வெளிநாடு ஒன்றில் பிரஜா உரிமை பெற்று செல்லும்போது உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

5. அரசாங்க சேவையில் நிரந்தர மற்றும் ஓய்வூதியத்துடன் கூடிய தொழில் ஒன்றிற்காக செல்லும்போது வேலையில் இருந்து விட்டு விலகுதல்.

6. கூட்டுத்தாபனம் ஒன்றும் மூடப்படும் போது அல்லது மேலதிக தொழிலாளர்களை நீக்கும் போது வேலையில் இருந்து விலகுதல்

இவ்வாறான 06 சந்தர்ப்பங்களிலும் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

இது தவிர ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர் இறந்த பின்னர் அவர் சார்ந்த பின்னுரித்தாளிகள் அவரின் EPF பணத்தினை பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக்கொள்ள உங்கள் நிரந்தர வதிவிடத்திற்கு அண்மையில் உள்ள தொழில் திணைக்களத்தில் விண்ணப்பங்களை கையளிப்பதன் மூலம் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், உங்கள் EPF பணத்தினை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவம் மற்றும் ஏனைய விண்ணப்பப் படிவங்களை தொழில் திணைக்களத்தின் இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

தொழில் திணைக்கள விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள click பண்ணவும்

இது தவிர மேலதிக தகவல்களை உங்கள் வதிவிடத்திற்கு அண்மையில் உள்ள தொழில் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.


YouTube video

https://youtu.be/v3E0JK7vL1g?si=rxKwsFHVkECFkTbl








Sunday, February 11, 2024

அரச உத்தியோகத்தர்களின் ஆவண கோப்புக்கள் இன் குறைபாடுகள்

 



இணைந்த சேவைகளின் கீழ் உள்ள ஒவ்வொரு சேவையினை click செய்து பதிவிறக்கம் செய்வதன் மூலம், உங்கள் நிறுவனத்தைச் சேரந்த உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கைகள் தொடர்பான ஆவண கோப்புகளில் குறைபாடாக உள்ள ஆவணங்கள் பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

1. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை


2. (I)அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை

    (II)அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை


3. இணைந்த சாரதிகள் சேவை


4. அலுவலக ஊழியர் சேவை


5. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை


Thursday, June 22, 2023

இலங்கை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக்கொள்பவர்களின் பெயர் பட்டியல் - "அஸ்வெசும"

 


இலங்கை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட "அஸ்வெசும" திட்டத்தின் மூலம் பணக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை உங்கள் கிராம சேவகர் பிரிவினை தெரிவு செய்து கொள்வதன் மூலம் உங்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

பெயர் பட்டியலினை பெற்றுக் கொள்ள கீழ் உள்ள link யினை கிளிக் செய்யவும்.

https://iwms.wbb.gov.lk/household/list


உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் மேல்முறையீடு செய்து அல்லது ஜூலை மாதத்திற்குப் பின் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமாக இருக்கும். 

இது தொடர்பில் உங்கள் கிராம சேவகரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும்'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், 40% குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 4 பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாவை அரசாங்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Friday, May 5, 2023

வருடாந்த இடமாற்றம்.

 

இலங்கை அரச சேவையில் இடம்பெறும் வருடாந்த இடமாற்றம் சம்பந்தமான கடிதத்துடனான பெயர் பட்டியல் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக அவர்களின் ஒப்பமிடப்பட்டு 2023.05.04 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கை நிர்வாக சேவை தரம் I , II, III க்கான இடமாற்ற பட்டியல், இலங்கை கணக்காளர் சேவை தரம் I,II,III க்கான இடமாற்றம் மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை தரம் I,II,III க்கான இடமாற்றம் என்பன தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கீழ் உள்ள link யினூடாக இடமாற்றம் பற்றிய கடிதம் மற்றும் பெயர் பட்டியலினை பெற்றுக் கொள்ள முடியும்்

இலங்கை நிர்வாக சேவை தரம் I ,II, II (SLAS

இலங்கை கணக்காளர் சேவை தரம் I,II,II (SLACS)

இலங்கை திட்டமிடல் சேவை தரம் I,II,III ( SLPS)

Tuesday, May 2, 2023

அதிபர் சேவையின் பிரச்சினைகளுக்கான தீர்வு



 அதிபர்கள் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவசர தீர்வுகளை சமர்ப்பிக்க ஐந்து உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர்

இலங்கை அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவும் குறைபாடுகள் மற்றும் சேவைப் பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து அவற்றுக்கான உடனடித் தீர்வுகளை தெரிவிப்பதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த குழுவொன்றை நியமித்துள்ளார். கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத்தில் ஐந்து நிபுணர்கள் அடங்கிய குழு ஏற்கனவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

அதிபர்களின் அனைத்து தொழிற்சங்கங்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெறப்பட்டு, மேலதிக விவரங்களைச் சமர்ப்பிக்க மே 9  வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 15 ஆம் தேதி முதல் சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கல்வித் துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து யோசனைகளைப் பெறவும், மாகாணங்கள், வலயங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பாடசாலைகளுக்குச் செல்லவும் எதிர்பார்க்கிறோம் என்று குழுத்தலைவர் தெரிவித்தார். அதிபர்களின் பணிகளின் தற்போதைய நிலையைப் பார்க்கவும். உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை கருத்தில் கொண்டு அதிபர்களின் சேவையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Reference Link.

Sunday, April 30, 2023

பரீட்சை நாட்கள் - மே மாதம்.

 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் தொடர்பாக பரீட்சை நாட்கள், பரீட்சையின் பெயர் மற்றும் பரீட்சை நடைபெறும் இடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணையினை பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜெ.எம்.சீ அமித் ஜயசுந்தர அவர்களினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் நாட்காட்டியினை கீழ் உள்ள link யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

Exam days - Month of May 2023

பார்வை குறைபாடு உள்ளவர்கள்

  கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் இந்த கண்பார்வை. இந்த க...