கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் இந்த கண்பார்வை. இந்த கண்பார்வை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்து நோக்கிலேயே தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சுகாதார அமைப்பு உலக கண்பார்வை தினத்தை அனுஷ்டிக்கின்றது.
உலக அளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வை குறைபாடு உள்ளதாகவும், 246 மில்லியன் பேர் குறைவான பார்வை திறனோடும், 39 மில்லியன் பேர் பார்வை இல்லாமலும் உள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதில் பார்வை குறைபாடு உள்ளவர்களில் சுமார் 90% பேர் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தில் இருக்கின்றார்கள் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.
இந்த பார்வை குறைபாடு அல்லது பார்வையற்றவர்கள் பற்றி சில குறிப்புகளை தான் இதில் நாம் பார்க்கப் போகின்றோம்.
கண்பார்வையற்றவர்கள் தொடுகைகள் மூலமாகவே தமக்கு முன்னால் உள்ளவற்றினை அதிகம் உணர்ந்து கொள்கிறார்கள். அத்தோடு அவர்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடம்பெயர பெரிதும் உதவுவது அவர்கள் கையில் இருக்கும் கோல் அதாவது வெள்ளைப்பிரப்பு என்று நாம் சொல்வோம், இதன் உதவியினாலே அவர்கள் பயணங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
சாதாரண மனிதர்களைப் போன்று இவ்வுலகில் அவர்கள் வாழ முடியாவிட்டாலும் அவர்கள் வாழ்வதற்காகவும் பல துறைகளில் அவர்கள் கால் பதிக்கவும் பல வழிமுறைகள் சமைக்கப்பட்டுதான் இருக்கின்றது.
ஒரு மனிதனை முழு மனிதனாக்குவது கல்விதான். அந்த கல்விக்கு அச்சாணியாக இருப்பது தான் எழுத்து. அத்தோடு ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு வாசிப்பதும், எழுதுவது முக்கியமானது அடித்தளமாகும்.
அந்த வகையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு எழுதுவதும், வாசிப்பதும் குறைபாடாக காணப்படக்கூடாது என்பதற்காக France கல்வியலாளர் Lousie Braille என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே Braille எழுத்து முறையாகும். இந்த Braille எழுத்து முறையானது பார்வையற்றவர்களுக்கான குத்தெழுத்து முறையாகும். இதனைக் கொண்டு அவர்கள் எழுத வாசிக்க முடியும். Braille பயன்பாட்டில் 133 மொழிகளில் Braille குறியீடுகள் காணப்படுகின்றன இதுவே இவர்களுக்கு பெரும் சாதமாக சாதகமாக அமைகின்றது. அது மாத்திரமன்றி இந்த குத்தெழுத்தின் நவீன வடிவங்களாக typewriter , printer எனவும் இருக்கின்றது.
அதுமாத்திரமன்றி இந்த நவீன உலகோடு அவர்களும் கைகோர்த்து செல்ல கணினி, கையடக்க தொலைபேசி என்பனவற்றை அவர்களும் உபயோகிக்க வேண்டும் என்பதற்காக taking software உருவாக்கப்பட்டது. இதனை கொண்டு அவர்கள் நவீன உபகரணங்களையும் கையாளக் கூடியதாக உள்ளது
இவ்வாறான சாதனங்கள் இருக்கின்ற போது கல்விக்கு ஏது தடங்கல் என அவர்களுக்கு கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் திஹாரி, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இவ்வாறான கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.
பல்கலைக்கழக மாணவர்களாக, விரிவுரையாளர்களாக, வளவாளர்களாக பல பரிமாணங்களில் அவர்கள் கல்வித் துறையில் கால் பதிக்கின்ற போது கல்விக்கு குறை என்றும் தடையல்ல என உரக்கச் சொல்கிறது.
கல்வித் துறையில் மாத்திரமன்றி இவர்களின் திறமைகளை நாங்கள் பார்க்கும்போது எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றனர். பாடல், நடனம், திறமையான பேச்சு, கணினி, கையடக்க தொலைபேசி போன்ற நவீன உபகரணங்களை கையாளும் திறன், விளையாட்டு இவ்வாறான திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தும்போது உண்மையில் நாம் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
பார்வையற்றோர் என்றால் யாசகம் கேட்பார்கள், மற்றோரை வேண்டி இருப்பவர்கள், சுய செயல்பாடுகளை இழந்தவர்கள் என எண்ணி அவர்கள் எப்போதும் ஒரு மூலையில் உட்கார வேண்டியவர்கள் என்ற எம் மாயை தகர்த்தெறிய வேண்டும்.
நாம் விலகி அவர்களுக்கு இடம் கொடுத்தால் போதும் அவர்கள் அவர்களாகவே முன்னேறிக் கொண்டு செல்வார்கள். சில இடங்களில் நாம் கை கொடுத்து எழுப்ப வேண்டியிருக்கும் அதை நாம் செய்துவிட்டால் எமக்கு அல்லது எம் சந்ததிகளுக்கு அவர்கள் முன்னுதாரணமாக இருப்பார்கள்.
ஏனெனில் சிறந்த நிதி வசதிகள் மூலம் சிகிச்சைகள் மேம்படுத்தப்படாவிட்டால் 2050 ஆம் ஆண்டுக்குள் கண் பார்வை இழந்தவர்களின் தொகை 36 மில்லியனிலிருந்து 115 மில்லியன் ஆகும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அபாய நிலையில் நாம் சந்ததியினர் எதிர்கொள்ளாமல் இருக்க இன்றிலிருந்து நாம் தயாராக வேண்டும். ஏனெனில் பார்வை குறைபாட்டால் தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே தான் பொருளாதார ரீதியாக அல்லது ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு நாம் முன்னேற வாய்ப்பளிப்பதன் மூலமாக அவர்களின் எதிர்காலமும் எதிர்கால சந்ததியும் சிரமமற்ற இவ்வுலகில் வாழ முடியும்.
https://youtu.be/HiJPRmlhZzQ?si=GIyDzvF1CdKda1qi
தேடல் :- A.K. Arham ( B.A)
No comments:
Post a Comment