Sunday, April 30, 2023

பரீட்சை நாட்கள் - மே மாதம்.

 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் தொடர்பாக பரீட்சை நாட்கள், பரீட்சையின் பெயர் மற்றும் பரீட்சை நடைபெறும் இடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணையினை பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜெ.எம்.சீ அமித் ஜயசுந்தர அவர்களினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் நாட்காட்டியினை கீழ் உள்ள link யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

Exam days - Month of May 2023

Saturday, April 29, 2023

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி - 2023

 


அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியினை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான அறிவித்தல் மற்றும் நிபந்தனைகளை 2023.04.21 ம் திகதியிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்றுநிருப இல. 19/2023 யினூடாக கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க அவர்களினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

அரச பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் அனைத்து பிரிவெனா மாணவர்கள் மற்றும் பிக்குமார்களும் சர்வதேச பாடசாலைகள் மற்றும்  இது போன்ற ஏனைய பாடசாலை மாணவர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும்.

இந்த பாடசாலை சிறுவர் சித்திரப் போட்டி சம்பந்தமான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்ப படிவத்தை கீழ் காணும் Link யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

School children Drawing Competition - 2023


Friday, April 28, 2023

இணைந்த சேவைகள் அலுவலகர்களின் தகவல்களை புதுப்பித்தல்.

 

அரச சேவையில் கடமை புரிகின்ற இணைந்த சேவைகள் அலுவலகர்களின் தகவல்களை  MISCO தளத்தினூடாக புதுப்பிக்குமாறு இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் 2023.03.15 ம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களை புதுப்பிப்பதற்கான இறுதி திகதி 2023.05.02. 


இணைந்த சேவைகள் அலுவலகர்களின் தகவல்களை சேகரித்தல், பணியாளர்களின் தகவல்களை புதுப்பித்தல், இடமாற்ற கோரிக்கைகளை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளை online யினூடாக முன்னெடுக்க  இணைந்த சேவைகள் பிரிவால் MISCO மென்பொருள் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

MISCO மென்பொருளை அணுகக்கூடிய வழிகள்.

1.  LGN மூலம் இணைய வசதி இருந்தால்


2. பிற வலையமைப்புகள் மூலம் இணைய வசதி இருந்தால்



MISCO மென்பொருளின் link யினையும், அது சம்பந்தமான இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் கடிதத்தினை யும்  கீழ் உள்ள link யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

 MISCO link & Letter

பரீட்சை முடிவுகள்.

 



குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் Grade II of the Post of Authorized Officer, Segment 2 - Field/Office based Officers க்கான பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள கீழ் உள்ள link யினூடாக பெற்றுக் கொள்ளலாம்.


View the Exam Results



Monday, April 24, 2023

Exam Results பரீட்சை முடிவுகள் - வாய்மொழி





அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இறுதியாக நடைபெற்ற இரண்டாம் மொழிக்கான வாய்மொழி மூலமான பரீட்சைகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 රාජ්ය භාෂා දෙපාර්තමේන්තුව විසින් පවත්වනු ලබන අවසන් දෙවන භාෂා වාචික විභාග ප්‍රතිඵල නිකුත් කර තිබේ.

பெறுபேறுகளை பார்க்க.

Click 🔻

View the Exam Results



Tuesday, April 18, 2023

அரச சேவை செய்து கொண்டிருக்கும் போதே சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் -2023


 அரச சேவை மேற்கொண்டிக்கும் தருவாயில் அரச சேவையிலிருந்து நீக்கப்பட்டார் விஜய் பட்டியலினை பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இவர்களை மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொண்டு ஆட்சேர்ப்பு செய்ய முடியாத உத்தியோகத்தர்கள் இவர்கள்.

விபரம்.


https://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=125&Itemid=352&lang=ta
 


பார்வை குறைபாடு உள்ளவர்கள்

  கண் பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்று மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் இந்த கண்பார்வை. இந்த க...