சில செக்கன்கள் அல்லது ஓர் சில நிமிடங்கள் தான் நிலநடுக்கத்தின் காலம். அதற்க்குள் பல உயிர்களையும் சொத்துக்களையும் அழித்து முடித்துவிடும். இந்த நிலநடுக்கத்தினைப் பற்றி சில அறிவார்ந்த விடயங்களை தேடிப்பார்க்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மானிடனுக்கும் காணப்பட வேண்டிய ஒன்று.
அந்த வகையில் நிலநடுக்கம் பற்றிய தேடல்மிக்க ஓர் தொகுப்பே இது.
எமது புவியோட்டின் கீழ் பகுதியில் புவித்தகடுகள் தொடர்ந்தும் அசைவுக்குள்ளாகும் போது அது புவி அசைவு எனப்படுகிறது. இந்த அசைவுகள் பாரிய சேதங்களை ஏற்படுத்துமேயானால் அதனை புவி நடுக்கம் அல்லது நில நடுக்கம் எனப்படும்.
இந்த புவித்தகடுகள் என்பதனை சற்று கூர்ந்து கவனிக்கின்ற போது பிரதானமாக 07 தகடுகள் காணப்படுவதோடு 12 சிறிய தகடுகளும் காணப்படுகின்றன. இவை ஒன்றிலிருந்து ஒன்று விட்டு விலகும் போது அல்லது ஒன்றோடு ஒன்று ஒருங்கும் போது அல்லது ஒன்றைவிட்டு ஒன்று அமிழும் போது நிலநடுக்கத்தினை நாங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
இந்த புவியின் உட்பகுதியில் ஏற்படும் இயற்கை அசைவுகளால் மாத்திரம் நிலநடுக்கம் ஏற்படுவதில்லை. மாற்றமாக சமுத்திரங்களில் ஏற்படுகின்ற நிலநடுகத்தாலும், எரிமலைகளில் ஏற்படும் நில நடுக்கத்தாலும், அணுகுண்டுக்களின் வெடிப்புக்களாலும், புவியின் புறத்தில் கனிய எண்ணெய்யினை பெடுமளவில் பயன்னடுத்துவதால் ஏற்படும் வாயுவாலும் இந்த இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட காரணமாகவுள்ளது.
நிலம் அசைவதாலும், கட்டிடங்களும் மரங்களும் சாய்வதாலும், பெரும் சப்தங்களாலும் நில நடுக்கம் ஏற்பட்டடுள்ளதை நாங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்து இலட்சம் நில நடுக்கங்கள் இந்த பூமியில் ஏற்படுகின்றது. இதில் சுமார் ஒரு இலட்சம் நில நடுக்கங்கள் மாத்திரமே எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு 90% ற்கும் அதிகமான நில நடுக்கங்கள் பசுபிக் கடலை ஒட்டிய பிரதேசங்களில் உருவாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நில நடுக்கத்தின் தன்மையின் தீவிரத்தினை புவிநடுக்கமானியில் அளவிடலாம். இதனை 1935ம் ஆண்டு சார்ல்ள் எப். ரிச்டர் என்பவர் அறிமுகப்படுத்தியதன் காரணமாக நில நடுக்க அளவுத்திட்டத்திற்கு “ரிச்டர்” அளவுத்திட்டம் எனப்படுகிறது.
அந்த வகையில் 2.0 ரிச்டர் தொடக்கம் 3.5 ரிச்டர் வரையான நில நடுக்கத்தினை மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது ஆனாலும் நில நடுக்க மானியில் பதியப்படும்.
3.5 ரிச்டர் தொடக்கம் 5.5 ரிச்டர் வரையான நில நடுக்கத்தினை அனைவரினாலும் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேலும் 5.5 ரிச்டர் தொடக்கம் 7.3 ரிச்டர் வரையான நில நடுக்கத்தின் மூலம் கட்டிடங்கள் சேதமடைவதோடு சொத்து சேதங்களும் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளன.
ஆத்தோடு 7.4 ரிச்டர் தொடக்கம் 8.0 ரிச்டர் வரையான நில நடுக்கத்தினால் பாரியளவிலான அழிவுகளும் சேதங்களும் ஏற்படக்கூடியதாக இருக்கும்.
8.0 ரிச்டர் அளவுக்கு மேல் நில நடுக்கம் ஏற்படுமேயானால் முழுமையாக அழிவடைந்து தரைமட்டமாகக் கூடிய நிலை தோன்றும். இவ்வாறு நில நடுக்கத்திக் ரிச்டர் அளவுக்கேற்ப பூமியில் மாற்றங்களை கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
நில நடுக்கங்கள் எங்கும் எப்படியும் நிகழும் வாய்ப்புக்கள் காணப்படலாம். வரலாறுகளை புரட்டிப் பார்க்கின்றபோது பேசு பொருளாகக் கூடிய நில நடுக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன. அந்தவகையில் அண்மையில் (2023.02.06) துருக்கி சிரியா பகுதியளில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் ஒருவாரம் தாண்டிய நிலையிலும் மீட்புப் பணிகளும், 10,000க்கும் அதிகமான உயிரிழந்த சடலங்களும், அதிஷ்டவசமாக ஓரிருவர் உயிரோடும் மீட்கின்றனர்.
அதேபோல் இந்த உலகம் மறக்காத நில நடுக்கத்தின் எதிரொலி ஒன்று தான் இந்த “சுனாமி”. சுமாத்ரா தீவின் கடலுக்கடியில் நடந்த 9.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி பேரலைகள் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட வலிகள் இன்னும் இந்த உலகை விட்டு அழியவி;ல்லை.
எவ்வாறிருந்த போதிலும் நில நடுக்கம் ஏற்படும் என்பதனை நூறு வீதம் முன்கூட்டியே உணர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்யமுடியாது. இருந்தபோதிலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது எமக்கும் எம்மை சார்ந்தோருக்கும் பாதுகாப்பானதாகும்.
அந்தவகையில் எமது இடங்களில்
01. கண்ணாடிப் பொருட்கள் மற்றும் கனமான பொருட்கள் என்பவற்றினை அலுமாரியில் வைக்கின்ற போது கீழ் தட்டில் வைப்பது சிறந்தது
02. அலுமாரிவளை பூட்டி வைக்க வேண்டும். ஏனனில் நில நடுக்க வேளையில் அலுமாரியிலுள்ளவைகள் தூக்கி வீசப்படமல் இருக்கும்.
03. எமக்குத் தேவையான ஆவணங்கள் முக்கியமானவற்றை எளிதில் எடுக்கத்தக்கன வைப்பது நல்லது.
04. முதலுதவிப் பெட்டிகள் வீடுகளில் மட்டுமன்றி அலுவலகங்களிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
05. குடும்பத்தார் அனைவருக்கும் அவசர உதவி தொலைபேசி இலக்கங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
06. வீடுகளில் எரிபொருட்கள் எப்போதும் ஓர் ஒதுக்குப்புறமாகவே இருக்க வேண்டும்.
07. நிலநடுக்கம் வந்தால் வெட்டவெளியில் எங்கு ஒன்று கூடவேண்டும் என்று ஏலவே தீர்மானிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
08. முதலுதவிப் பயிற்சிகள் வீட்டிலுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டிருத்தல் அவசியமாகும்.
இந்த முன்னாயத்தங்கள் நில நடுக்கத்திற்;க்கு மட்டுமல்லாது எந்தவொரு அனர்த்தத்திற்க்கும் முகம் கொடுக்கத்தக்கன இருப்பதாகும்.
இவ்வாறான முன்னாயத்தங்கள் இருந்த போதிலும் நில நடுக்கம் ஏற்படும் வேளையில் நாம் சில விடயஙடகளை செய்ய தவறிவிடக்கூடாது. ஆவைதான்.
01. நில நடுக்கம் ஏற்படுகின்ற வேளையில் பாதுகாப்பான வெட்டையாக இடத்திற்கு செல்வது.
02. லிப்ட் பாவிக்காமல் இருப்பது
03. நெருப்பு எரிந்து கொண்டிருந்தால் அணைத்துவிடுவது. (சமையல் போன்ற வேளையில்)
04. கட்டில்கள், கனமான மேசைகளின் கீழ் பாதுகாப்பாக இருப்பது
05. கண்கள், தலையின் பின் பகுதி போன்றவற்றை எமது கைகளால் பாதுகாத்துக் கொள்வது
06. கதவுகள், ஜன்னல்களுக்கு அருகில் இருப்பதை தவிர்ப்பது
இவ்வாறான முன்னேற்பாடுகளோடும், பயிற்சிகளோடும் நாம் இருக்கின்ற போது நில நடுக்க வேளைககளில் உயிரிழப்புக்கள் ஏற்படுவதிலிருந்து அதிகம் எம்மையும் எம்மை சார்ந்தோiரையும் பாதுகாத்துக் கொள்ள முனையலாம்.
🔴 Watch YouTube Video #Earthquacke
தேடல்
A.K. Arham (B.A)