இளைஞர்கள் என்பவர்கள் சமூகத்தின் முதுகெலும்பு. ஓர் மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ அதே போல் சமுகத்திற்கு அவர்களின் இளைஞர்கள் கூட்டம் அவர்களுக்கான முதுகெலும்பு.
இளைஞர்கள் எப்போதும் நண்பர்கள் சூழ கூட்டமாக இருப்பதையே பெரிதும் விரும்புவார்கள். அவ்வாறு நண்பர்கள் கூட்டமான அக்கரைப்பற்று இளைஞர்கள் சிலர் சமூகத்தின் தேவைகள், அதன் குறைபாடுகள் பற்றியும் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டதன் காரணமாக அந்த நண்பர்கள் கூட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்டதே இந்த றோயல் யூத்ஸ் அமைப்பு.
எந்தவொரு இலாப நோக்கற்ற சிந்தனையின் கீழ் அரசியல், இன் மத பாகுபாடு இல்லாமலும் ஏன் எந்த நாடு என்ற வேறுபாடு இல்லாமல் இறைவனின் நற்கூலியை மட்டும் எதிர்பார்த்து தங்கள் சேவைகளை செய்து வருகிறது இந்த றோயல் யூத்ஸ்.
2012ம் ஆண்டு அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இஸ்லாமிய நூலகம் ஒன்றை உருவாக்கி தங்களது முதலாவது பணியை ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் அவர்களின் சேவைகள் குறுகிய காலத்தில் நாடு கடத்தும் விரிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த றோயல் யூத்ஸ் தங்களை முதலில் சாதாரணமான இளைஞர் கழகமாகவே பதிவு செய்தனர். பின்னரான காலத்தில் இந்த அமைப்பு அரச சார்பற்ற நிறுவனமாக தங்களை பதிவு செய்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு அவர்களது 4 ஆண்டு நிறைவை யொட்டி அவர்கள் பதித்து வந்த சுவடுகளை காணொளியாக ஒன்றுதிரட்டிய காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
றோயல் யூத்ஸ் யின் இணைய தளம் முகவரி. www.royalyouths.lk